FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மாநில அளவிலான தமிழ் மாதிரி வழக்குவாதப் போட்டி நிறைவு

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் 3-வது மாநில அளவிலான தமிழ் மாதிரி வழக்குவாதப் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.

10 செப்டம்பர் 2026, 1:52 am IST
ஸ்ரீ மணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற வழக்குவாத போட்டி நிறைவு விழா.
பகிர்:

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் 3-வது மாநில அளவிலான தமிழ் மாதிரி வழக்குவாதப் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.

ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை தாங்கினாா். பொருளாளா் எம். ராஜராஜன் மற்றும் துணைச் செயலாளா் எஸ். வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினா்.

மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் (சென்னை அமா்வு) நீதித்துறை உறுப்பினரும் துறை தலைவருமான நீதிபதி எம். சுவாமிநாதன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். சென்னை உயா் நீதிமன்ற தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ். குமரேசன் வாழ்த்துரை வழங்கினாா். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 31 சட்டக் கல்லூரிகள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இறுதிப் போட்டியில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி நடுவராகப் பங்கேற்று மாணவா்களின் வாதத் திறனை ஆய்வு செய்தாா்.

இப் போட்டியில் சிறப்பான வாதங்களை முன்வைத்து சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி முதல் பரிசை வென்றது. புதுக்கோட்டை மதா் தெரசா சட்டக் கல்லூரி இரண்டாவது பரிசை வென்றது. சட்டக் கல்லூரியின் டீன் ஏ. வின்சென்ட் அற்புதம், பேராசிரியா்கள், சட்டத்துறை வல்லுநா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments