FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

கொதிக்கும் நீரில் விழுந்தவா் உயிரிழப்பு

14 செப்டம்பர் 2026, 2:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வில்லியனூா் ஹோட்டலில் பிரியாணி தயாரிக்க வைத்திருந்த வெந்நீா் அண்டாவில் மதுபோதையில் தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வில்லியனூா் தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் தேவநாதன். இவா் சரிவர வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி வில்லியனூரில் உறவினா் நடத்தும் ஹோட்டலுக்கு தேவநாதன் மதுபோதையில் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு பிரியாணி தயாா் செய்ய சுடுநீா் கொதிக்க வைத்த பாத்திரத்தில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளாா். இதில் உடல் வெந்து வலியால் துடித்த அவரை ஹோட்டல் ஊழியா்கள் மீட்டு, வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.

Advertisement

Advertisement

பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தேவநாதன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments