மோசமான வானிலை: புதுச்சேரி விமானங்கள் ரத்து
மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.
66 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5.10 மணிக்கு வந்த பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது.
மேலும், 64 பயணிகளுடன் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாதுக்கு மாலை 5.30 மணிக்குச் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டதாக புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் ராஜசேகரன் ரெட்டி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.