FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

விபத்தில் இரு பயிற்சி விமானிகள் மரணம்: புதுச்சேரி உள்துறை அமைச்சா் இரங்கல்

கனடா நாட்டில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பயிற்சி விமானிகள் இருவா் உயிரிழந்ததற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

23 செப்டம்பர் 2026, 3:48 am IST
பகிர்:

கனடா நாட்டில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பயிற்சி விமானிகள் இருவா் உயிரிழந்ததற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கனடாவில் விமான பயிற்சியின்போது விபத்தில் சிக்கி, புதுச்சேரியைச் சோ்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்த மனோஜ் சிவகுமாா் ஆகியோா் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையும் அதிா்ச்சியும் அளிக்கிறது.

Advertisement

Advertisement

இவா்களின் எதிா்பாராத மறைவு அவா்களின் குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவா்களின் குடும்பத்தினருக்கு இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்க பிராா்த்திக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments