FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பக்த மஹா ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

சங்கராபுரம் அருகே சு.குளத்தூர் விஸ்வரூப பக்த மஹா ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சங்கராபுரம் அருகே சு.குளத்தூர் விஸ்வரூப பக்த மஹா ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தை அடுத்த சு.குளத்தூரில் 32 அடி உயரத்தில் விஸ்வரூப பக்தமஹா ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்கள் உதவியுடன் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது .
முன்னதாக, காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, சுதர்சன, தன்வந்திரி, ஸ்ரீராம மூலமந்திர ஹோமங்கள், நாடி சந்தானம், ஸ்பர்ஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, காலை 10 மணியளவில் விஸ்வரூப பக்தமஹா ஆஞ்சநேயருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சு.குளத்தூர் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments