FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, முக்கிய இடங்கள், கிராமங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகளும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, வரும் 15, 17-ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த வழிபாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சார்பில், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில்,  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் புகழேந்தி, முகிலன், டிஎஸ்பிக்கள் சங்கர்,  மகேஷ், இளங்கோவன், திருமால், கோமதி, ராஜேந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 2,377 சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்குவது. அனுமதிக்கப்படாமல் சிலைகள் வைப்பதை அகற்ற வேண்டும். சிலை வழிபாடுகளின்போது, விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். விதமீறல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஒவ்வொரு கோட்டத்திலும் எவ்வளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது, அந்தச் சிலைகள் என்றைக்கு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது, எந்த வழியில் ஊர்வலம் செல்கிறது என ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடுகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை 
வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments