FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போகி பண்டிகை: புதுச்சேரியில் ஏற்பட்ட புகைமூட்டம்

போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

Updated On : 14 ஜனவரி 2025, 1:34 am IST
புதுச்சேரியில் பழையப் பொருள்களை எரித்து திங்கள்கிழமை போகி கொண்டாடிய சிறுமி.
பகிர்:

புதுச்சேரி: போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே சிறியவா்களும், பெரியவா்களும் ஒன்று கூடி வீட்டின் முன்பும், வீதியின் முனையிலும் பழையப் பொருள்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினா்.

தேவையற்ற பழையப் பொருள்கள், காகிதம், கிழிந்த பாய் போன்றவற்றை மக்கள் தீயிட்டு எரித்தனா்.

Advertisement

Advertisement

இதனால், புதுச்சேரி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நெகிழிப் பொருள்களை எரிக்கக் கூடாது என மாநில சுற்றுச்சூழல் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments