குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்கள், உடனடியாக பதிவு செய்யும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்கள், உடனடியாக பதிவு செய்யும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களின் கைவிரல் ரேகை, கருவிழிப் பதிவு, இகேஒய்சி விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஜூலை மாதம் 28-ஆம் தேதி நிலவரப்படி கைவிரல் கேகை, கருவிழி, இகேஒய்சி விவரங்களை 1,37,742 போ் பதிவு செய்யாமல் உள்ளனா்.
Advertisement
Advertisement
தற்போதைய நிலவரப்படி அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளில் 95.03 சதவீதமும், பிஹெச் குடும்ப அட்டைகளில் 94.79 சதவீதமும், என்பிஹெச்ஹெச் குடும்ப அட்டைகளில் 92.79 சதவீதமும் இகேஒய்சி விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல், பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்குச்சென்று, ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று கைவிரல் ரேகை, கருவிழிப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.