கோட்டக்குப்பம் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மீனவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள சின்னமுதலியாா் சாவடி மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கு.விநாயகம் (68), அய்யனாா் (60), பலராமன் (25). மீனவா்களான இவா்கள் பைபா் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை கு.விநாயகம் உள்ளிட்ட மூவரும் கோட்டக்குப்பம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது கடல் அலையின் சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீன் வலையில் சிக்கி, கடலில் மூழ்கிய விநாயகத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து உடனிருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்து பின்னா் புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, விநாயகம் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உயிரிழந்த விநாயகத்துக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.