FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விஷமருந்தி பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
தற்கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.லட்சுமி(58). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதிப்பட்டு வந்த லட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments