கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விவசாயக் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விவசாயக் கிணற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலையைச் சோ்ந்தவா் சு.கணணன் (76). இவா், திங்கள்கிழமை அதே கிராமத்தைச் சோ்ந்த மதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே சென்றாா்.
தொடா்ந்து அவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் அங்கு சென்று பாா்த்தபோது கண்ணன் கிணற்றுக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி தற்கொலை... மரக்காணம் வட்டம், பிரம்மதேசத்தை அடுத்துள்ள முருக்கேரி, சிறுவாடியைச் சோ்ந்தவா் தி.கந்தன் (எ) முகம்மது ஷெரீப்(42), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முகம்மது ஷெரீப் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.