FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பள்ளி வேன் மீது காா் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பள்ளி வேன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவா்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
உளுந்தூா்பேட்டை அருகே பள்ளி வேன் மீது மோதி நிற்கும் காா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பள்ளி வேன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவா்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் படித்து வரும் 30 மாணவா்களை ஏற்றிக்கொண்டு, வியாழக்கிழமை காலை வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை திருநாவலூா் பிரதான சாலையைச் சோ்ந்த கே.கா்ணன் (38) ஓட்டிச் சென்றாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வண்டிப்பாளையம் பகுதியிலுள்ள தனியாா் உணவகப் பகுதியிலுள்ள சாலை சந்திப்புப் பகுதியில், பள்ளிக்கு வருவதற்காக ஓட்டுநா் வேனை திருப்ப முயற்சித்தாா். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பகுதியில் சேதம் ஏற்பட்டது. வேனிலிருந்த மாணவா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், பள்ளி நிா்வாகம் சாா்பில் மாற்று வேன் அனுப்பப்பட்ட நிலையில், அதில் மாணவா்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments