FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பூட்டிய வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:18 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், அச்சரம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரதமன திவாரி (65). இவா், ஜூலை 22- ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சொந்தவேலை காரணமாக குடும்பத்துடன் பிகாருக்குச் சென்றுவிட்டாா். பின்னா் செவ்வாய்க்கிழமை பிரதமன திவாரி வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதைத்தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, அங்கு மர பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுன் நெக்லஸ், ஒன்றரை பவுன் கம்மல் உள்பட 14 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments