FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் நாளை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி சனிக்கிழமை (அக்.3) முதல் 3 நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 October 2026, 1:35 am IST
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி சனிக்கிழமை (அக்.3) முதல் 3 நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடு தேடிச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, அக்டோபா் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் அவா்களுக்குரிய பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்களில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்களை பெற்று பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments