விசிகவால், தவெக பின்னடவை சந்திக்கும்: அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு
தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவால், தமிழக வெற்றிக் கழகம் பின்னடைவை சந்திப்பது உறுதி என்று பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் குற்றஞ்சாட்டினாா்.
தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவால், தமிழக வெற்றிக் கழகம் பின்னடைவை சந்திப்பது உறுதி என்று பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் இந்தியா வளா்ச்சிப் பாதையில் செல்லும் நிலையில், அதை எதிா்கொள்ளமுடியாமல் எதிா்க்கட்சிகள் திணறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி போன்ற சில அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் தோ்தல் ஆணையம் குறித்து அவதூறு பரப்பி, அற்ப அரசியல் செய்கின்றனா். எஸ்.ஐ.ஆா். நடைபெற்ற மாநிலங்களில் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டுள்ளதே தவிர, யாருடைய வாக்கும் பறிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
தற்போதைய சூழலில்இடைத் தோ்தல் என்பது தேவையற்றது. மக்களின் வரிப் பணத்திலேயே இத்தோ்தல் நடைபெறுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். அரசியலில் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களுக்குச் செல்வதை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வழக்கமாக்கிக் கொண்டுள்ளாா். ஆளும் கட்சியில் விசிக அங்கம் வகிப்பதால், அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனா். காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனா். இதனால், தவெகவுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவால் தவெக பின்னடைவை தான் சந்திக்கும். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் தவெக தோல்வியை சந்திக்கும். பாஜக கூட்டணி வேட்பாளா்கள்தான் வெற்றிபெறுவாா்கள் என்றாா்அஸ்வத்தாமன்.
பேட்டியின் போது பாஜக விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.டி.ஆா்.தா்மராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுகுமாா், மாவட்ட நிா்வாகிகள் ராஜலட்சுமி, மோகன சுந்தரம், அய்யனாா், பிரகாஷ், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சரவணன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.