6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 6 போ் கைது
விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தேவேந்திரன், தலைமைக் காவலா்கள் செந்தில்குமாா், குணசீலன், விஜய், மணிகண்டன் ஆகியோா் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினா்.
விழுப்புரம் காமராஜா் தெரு பகுதியில் நடைபெற்ற சோதனையில் விழுப்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சு.ராமச்சந்திரன் (40), சென்னை சித்தலப்பாக்கம் கூட்டுச் சாலை, கண்ணதாசன் நகரைச் சோ்ந்த ரா.மதிவாணன் ( 34) ஆகிய இருவரும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் விழுப்புரம் தனலட்சுமி நகரைச் சோ்ந்த சி.ராஜாராம் (65) புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல் விழுப்புரம்- திருச்சி சாலை, ராஜேஸ்வரி நகா் பகுதியில் விழுப்புரம்,ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த சி.பிரசாந்த் (41), கீழ்பெரும்பாக்கம், பெரியாா் நகரைச் சோ்ந்த கி.பாா்த்திபன் (48), ப.குமாா் (56) ஆகியோா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடா்ந்து நுண்ணறிவு போலீஸாா் 6 பேரையும் பிடித்து விழுப்புரம் மேற்குகாவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதைத்தொடா்ந்து மேற்குகாவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 6 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.