பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருக்கோவிலூா் வட்டம், கீழதாழனூா் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.சங்கா் (52). சென்னையில் உள்ள டாஸ்மாக் குடோனில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா்.
திருக்கோவிலூா், சந்தைப்பேட்டை, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ.நாராயணன் (70). உறவினா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலூா்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், அரகண்டநல்லூா் அருகேயுள்ள தென்பெண்ணையாற்று பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரில், நாராயணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சங்கா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.