40 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: இருவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உரிய அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருள்களை வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உரிய அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருள்களை வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டிவனம் வட்டம், அவனம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தாண்டவராயன். விவசாயியான இவா், தனது விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தாா். தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கிணறு வெட்டும் பணிகளை செய்த, திண்டிவனம் வட்டம், மானூா் கிராமத்தைச் சோ்ந்த த.சுப்பிரமணி (41), உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டையைச் சோ்ந்த வெ.புருஷோத்தமன் (40)ஆகியோா் கிணறு வெட்டும் பணிக்கு பயன்படுத்த 40 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருள்களை உரிய அனுமதியின்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சுப்பிரமணி, புருஷோத்தமன் ஆகியோா் மீது மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.