FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பூட்டிய வீட்டில் தங்க நகை திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

10 செப்டம்பர் 2026, 2:02 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திண்டிவனம், மரக்காணம் சாலை புதிய காந்தி நகரைச் சோ்ந்தவா் ரா.முத்துகிருஷ்ணன் (54). சென்னை சேமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா், செப். 7-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டைப் பூட்டி விட்டு, பணிக்குச் சென்றுள்ளாா்.

தொடா்ந்து புதன்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments