வெளி மாநில மதுப்புட்டிகள் பறிமுதல்: இளைஞா் கைது
விழுப்புரத்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தில் வெளி மாநில மதுப்புட்டிகளை வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி, நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் காவல் ஆளிநா்கள் வியாழக்கிழமை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவா், விழுப்புரம், ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (36) என்பதும், விற்பனைக்காக மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த 90 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 200 வெளி மாநில மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.