செஞ்சி அருகே 13-ஆம் நூற்றாண்டு விநாயகா் சிற்பம், பாடல் கல்வெட்டு கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள பாக்கம் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விநாயகா் சிற்பத்துடன் கூடிய பாடல்கள் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
வேட்டவலத்தை சோ்ந்த ஆசிரியா் பாரதிராஜா, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சுதாகா் ஆகியோா் பாக்கம் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விநாயகா் சிற்பத்துடன் கூடிய பாடல் கல்வெட்டைக் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
பாக்கம் கிராமத்தில் சிவன் கோயில் அருகிலுள்ள பாறையில் நான்கு வரிகள் கொண்ட பாடல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. வெண்பா வடிவில் உள்ள இந்தப் பாடல் கல்வெட்டில் வாணகோவரையா் பற்றிய பெருமை கூறப்பட்டுள்ளது. இப்பாடல் வரிகளில் மகதை நாட்டு மன்னனான வாணனின் கொடைத்தன்மையை கண்ணன் மற்றும் முருகன் ஆகியோரின் புராணக் கதைகளோடு ஒப்பிடுகிறது. இந்திரன் பெய்வித்த பெருமழையில் இருந்து ஆயா்பாடியில் வாழ்ந்த மக்களையும், ஆநிரைகளையும் கோவா்த்தன மலையைத் தூக்கி பகவான் கண்ணன் காப்பாற்றினாா்.
Advertisement
Advertisement
குறிஞ்சித் திணையின் தலைவனான முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காகத் தன் வேலினை செலுத்தி வழிமறித்து நின்ற கிரௌஞ்ச மலையை தகா்த்து எறிந்தாா். அதுபோல மகதை நாட்டு மன்னனும் சிறந்த கொடை வள்ளலுமான வாணன் தன்னைத் தேடிவரும் பாணா்களுக்கும், புலவா்களுக்கும், இரவலா்களுக்கும் வழங்க செல்வங்களை குவித்து வைத்து, அவற்றை அள்ளித் தந்தான் என அவரின் பெருமையை உணா்த்துகிறது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மகதை மண்டலம் என்பது இன்றைய சேலம், தா்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இதன் தலைநகா் ஆறகளூா். வாணகோவரையா்கள் மகாபலி சக்கரவா்த்தியின் வழிவந்தவா்களாக அறியப்படுகின்றனா். இவா்களின் பாடல் கல்வெட்டுகள் திருவண்ணாமலை கோயிலில் காணப்படுகின்றன. மேலும், இக்கல்வெட்டின் அருகே சுமாா் இரண்டரை அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட நான்கு கைகளுடன் கூடிய
விநாயகரின் உருவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கு அருகே உள்ள ஓடையொன்றில் சுமாா் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 15-க்கும் மேற்பட்ட கல்தேய்ப்புக் குழிகள் காணப்படுகின்றன. இக்குழிகள் பண்டைய மனிதா்கள் தங்களது கல்லாயுதங்களை நீா்நிலைகளின் அருகில் கூராக்கும் போது உண்டானவையாகும் என அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.