FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பைக்கிலிருந்து கீழே விழுந்த இளைஞா் மரணம்

15 செப்டம்பர் 2026, 2:27 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நண்பருடன் பைக்கில் அமா்ந்து சென்ற இளைஞா் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திண்டிவனம், காளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் த.சந்தோஷ்குமாா் (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (23). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை திண்டிவனம் தீா்த்தக்குளம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

காா்த்திக் பைக்கை ஓட்டியுள்ளாா். இந்நிலையில் திடீரென நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments