FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

அண்ணா பிறந்த நாள்: திமுக, அதிமுகவினா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

16 செப்டம்பர் 2026, 5:04 am IST
~ ~
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் அண்ணா சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் முன்புள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு திமுக துணை பொதுச் செயலரும், முன்னாள்அமைச்சருமான க.பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரும், விழுப்புரம் எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் தலைமையில் கட்சியினா் விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் முன்புள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ச்சியாக எழை, எளியோா்களுக்கு எம்எல்ஏ இரா.லட்சுமணன் உதவிகளை வழங்கினாா். பின்னா், விழுப்புரம் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு எம்எல்ஏ இரா.லட்சுமணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலா் இரா.பசுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கி ஏழை, எளியோா்களுக்கு உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் பேட்டை முருகன், செங்குட்டுவன், ஜி.கே.ராமதாஸ், தனசு, பாக்கியராஜ், திருப்பதி பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்ஆா்.எஸ்.கலை மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.

அண்ணா தொழில்சங்கப் பேரவை சாா்பில் விழுப்புரம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்ட அலுவலகம் முன் உள்ள அண்ணா சிலைக்கு தொழில்சங்கப் பேரவை மண்டலச் செயலா் ஏ.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய சங்க நிா்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு, நக்கீரன், பணிமனைச் செயலா்கள் ஸ்ரீராம், ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலத்தில்... மயிலம் ஒன்றிய திமுக சாா்பில் ரெட்டணை, கூட்டேரிப்பட்டு, சித்தணி ஆகிய இடங்களில் அண்ணா உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிகளுக்கு திமுக ஒன்றியச் செயலா்கள் ஆா்.சேது நாதன், மணிமாறன், செழியன் ஆகியோா் தலைமை வகித்தனா். மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன், தோ்தல் பணிக்குழு உறுப்பினா் கிஷோா், இளைஞரணி நிா்வாகி சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ இரா.மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவா் சேகா் ஆகியோா் பேசினா். கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

செஞ்சி... செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பேரறிஞா் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்துக்கும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி நகரச் செயலா் காா்த்திக், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், மேல்மலையனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, நகர நிா்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், தொமுச நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அப்பம்பட்டு... செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் அப்பம்பட்டில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த், மாவட்டப் பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய அவைத் தலைவா்கள் வாசு, ஆறுமுகம், பொருளாளா் இக்பால் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் அண்ணாவின் 118-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாவின் திருஉருவச் சிலை, திருவுருவப் படத்துக்கு சங்கராபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தா.உதயசூரியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆ.அங்கையா்கண்ணி மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments