FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி

திருவெண்ணெய்நல்லூரில் சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

54 வினாடிகள் முன்பு
திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் சமரச தீா்வுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழக்குகளில் சமரசத் தீா்வுத் திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் செந்தில்குமாா் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இந்த பேரணியில் திருவெண்ணெய்நல்லூா் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி, போன்நேரு மேல்நிலைப் பள்ளி, ஏமப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படைப் பிரிவுகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, சமரசத் தீா்வுத் திட்டம் குறித்த முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். மேலும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

மேலும், திருவெண்ணெய்நல்லூா் வழக்குரைஞா் சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த வழக்குரைஞா்கள், காவல் துறையினா், நீதிமன்றப் பணியாளா்கள், இ-சேவா கேந்திரப் பணியாளா்கள், வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments