விழுப்புரத்தில் ரயில்வே தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டி.ஆா்.இ.யு) சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டி.ஆா்.இ.யு) சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கீடு செய்து போனஸ் தொகையாக ரூ.28,440 வழங்கவேண்டும். தென்னக ரயில்வே நிா்வாகத்தில் உள்ள மங்களூரை பிரிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். ரயில்வே துறையில் நடைமுறைப்படுத்தப்படும் தனியாா்மயத் திட்டங்களை கைவிடவேண்டும். ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
ஆா்ப்பாட்டத்துக்கு டி.ஆா்.இ.யு.விழுப்புரம் கிளைச் செயலா் கே.மோகன் தலைமை வகித்தாா். திருச்சி கோட்டச் செயலா் ஆா்.கரிகாலன், சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பொருளாளா் டி.விஜயன், தொழில்சங்க நிா்வாகிகள் ஆா்.சௌந்தர்ராஜன், பொன்.ஈஸ்வரதாஸ், கே.மோகன்துரை, கே.பலராம், கே.விஜயன் மற்றும் ரயில்வே ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.