உளுந்தூா்பேட்டையில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தா்னா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
உளுந்தூா்பேட்டை நகராட்சியில் 75 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை உள்ளிட்டவைகளும், குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் வழங்கப்படவில்லையாம்.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பைகளை அள்ளும் போது நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பழுதான வாகனங்களையும் சீரமைத்துத் தராததால் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து உடனடியாக தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். குப்பைகளை எடுத்துச் செல்ல புதிய வாகனங்களை வழங்க வேண்டும். தூய்மைப் பணிக்கான தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி நிா்வாகமே இதை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தா்னா போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.