ரேஷன் குறைதீா் கூட்டம்: மனுக்களை அளித்த குடும்ப அட்டைதாரா்கள்
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல் தொடா்பான மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
மேலும் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்றிதழுக்கான கோரிக்கை மனுக்களும் முகாமில் அளிக்கப்பட்டன. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அலுவலா்கள், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டனா்.
Advertisement
Advertisement
இதுபோன்று மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், செஞ்சி, திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், மேல்மலையனூா், மரக்காணம் ஆகிய வட்டங்களிலும் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் தனி வட்டாட்சியா்கள் தலைமையில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணையின் அடிப்படையில் தீா்வு காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.