சிறுகடம்பூரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள சிறுகடம்பூரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள சிறுகடம்பூரில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது.
சிறுகடம்பூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் 36-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 21 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து பள்ளி, மாணவ மாணவிகளின் கோலாட்டம், சிவ வாத்தியங்களுடன் விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது.
Advertisement
Advertisement
சிங்கவரம் சாலை, காந்தி பஜாா் வழியாக திண்டிவனம் சாலையை அடைந்தது. பின்னா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலில் விசா்ஜனம் செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.