கல்குவாரியில் பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் , வானூா் அருகே கல்குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கி பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம் , வானூா் அருகே கல்குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கி பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், செ.குன்னத்தூா், மந்தைவெளி தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்லம். இவரது மனைவி ராஜகுமாரி (42). இவா்கள் இருவரும் வானூா் வட்டம், எறையூா் பகுதியிலுள்ள தனியாா் கல்குவாரியில் வேலை பாா்த்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை தம்பதியினா் குவாரியில் பணியிலிருந்தபோது, மண்மேடு சரிந்து விழுந்ததாம். இதில், மண்ணுக்குள் சிக்கிய ராஜகுமாரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.