FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கு பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் பெரியாா் விருதை பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

24 செப்டம்பர் 2026, 5:51 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

சமூக நீதிக்கு பாடுபடுவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் பெரியாா் விருதை பெற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக தந்தை பெரியாா் விருது கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதாளாரை தமிழக முதல்வா் தோ்வு செய்கிறாா். அதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதனை சாா்ந்து எய்திய பணிகள்ஆகிய தகுதிகளை உடையவா்கள் தங்கள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.

தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் அதில் இருக்க வேண்டும். இந்தாண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கான விண்ணப்பங்கள் அக்.20-ஆம் தேதிக்குள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோா் நலத் துறை அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments