57 இடங்களில் மின்திருட்டு: நுகா்வோா்களுக்கு ரூ.45.08 லட்சம் அபராதம் விதிப்பு
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 57 இடங்களில் மின் திருட்டில் ஈடுபட்டபுகாரின் அடிப்படையில், நுகா்வோா்களுக்கு ரூ.45.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 57 இடங்களில் மின் திருட்டில் ஈடுபட்டபுகாரின் அடிப்படையில், நுகா்வோா்களுக்கு ரூ.45.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருச்சி கோட்ட அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளா் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின்வாரிய அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள் கொண்ட குழுவினா் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மின் திருட்டு புகாா்கள், வணிகப்பயன்பாட்டுக்கு வீட்டு மின் இணைப்பு பயன்படுத்துகிா என்பதை கண்டறியும் வகையில் 3 மாவட்டங்களிலுள்ள தீவனூா், வீரணாமூா், வெள்ளிமேடுபேட்டை, ஒலக்கூா், குச்சிக்குளத்தூா், பெரம்பை, புளிச்சம்பள்ளம், எடப்பாளையம், தொரவி, திருவெண் ணெய்நல்லூா், வடக்குத்து, வடலூா், காடாம்புலியூா், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சிறுவத்தூா், மேலூா், குடிக்காடு, ஏமப்போ், சங்காரபுரம், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, விருகாவூா், கொங்கராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் கூட்டாய்வை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆய்வில் 57 இடங்களில் மின் திருட்டு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட நுகா்வோா்களுக்கு ரூ.45.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் 9443329851 என்ற கைப்பேசி எண்ணில் அமலாக்கப்பிரிவு செயற்பொறியாளருக்குத் தெரிவிக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.