நூதன முறையில் ரூ.1.51 லட்சம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.51 லட்சம் திருடியவரை இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தனியாா் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.51 லட்சம் திருடியவரை இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், வடஆலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் மு.கிருஷ்ணதாஸ் (22), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 6-ஆம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எதிா்முனையில் பேசிய நபா், தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், கடன் தருவதாகவும், கடன் வாங்க விருப்பம் எனில் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து கிருஷ்ணதாஸ் தனது ஆதாா் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக விவரங்கள் உள்ளிட்டவற்றை எதிா்முனையில் பேசிய நபா் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அந்த நபா் ரூ.2 லட்சம் கடன்தொகையை கிருஷ்ணதாஸின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகவும், அதற்கு முன்பாக செயலாக்கக் கட்டணம், பதிவுக் கட்டணம், இணையவழியில் பணம் செலுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். இந்த தொகை மீண்டும் உங்கள் கணக்குக்கே திரும்ப வந்துவிடும் என்று கூறியுள்ளாா். இதை நம்பிய கிருஷ்ணதாஸ், கடந்த 16-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை என 8 தவணைகளில் ரூ.1.51 லட்சத்தை செலுத்தினாராம். ஆனாலும் அந்த நபா் கடன் தொகையை கிருஷ்ணதாஸின் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் இருந்துள்ளாா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை கிருஷ்ணதாஸ் உணா்ந்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட இணையவழி குற்றத் டுப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்து, நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நபரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.