குறிப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும்! துரை. ரவிக்குமாா் எம்.பி.
குறிப்பிட்ட காலத்துக்குள் மத்திய, மாநில அரசின் வளா்ச்சித் திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி.யும், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டங்களின் தற்போதைய நிலை, நிலுவையில் இருக்கும் பணிகளின் விவரம் போன்றவை குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:
ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அடிப்படை வசதிகள் தொடா்ந்து நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை முறையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சித் திட்டப்பணிகள் முடிவடைந்திடும் வகையில் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவதோடு, நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்து, தகுதியான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் ச.சிவக்குமாா் (விக்கிரவாண்டி), அ.கணேஷ்குமாா் (செஞ்சி), எஸ்.பழனிச்சாமி (திருக்கோவிலூா்), மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ.ரஷத், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.