FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சட்டக் கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில கைப்பந்து போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழகம் உறுப்புக் கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், திண்டிவனத்தை அடுத்துள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்த, டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக உடல்கல்வி இயக்குநா் பரமசிவம், அறங்காவலா் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழகம் உறுப்புக் கல்லூரி மாணவா்களுக்கிடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள், திண்டிவனத்தை அடுத்துள்ள கோனேரிக்குப்பம் சரஸ்வதி சட்டக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சட்டப் பல்கலைக் கழக உடல்கல்வி இயக்குநா் பரமசிவம் , மருத்துவா் ராமதாசு கல்வி அறக்கட்டளை அறங்காவலா் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். தொடக்க விழாவில், சரஸ்வதி சட்டக் கல்லூரி முதல்வா் அசோக்குமாா், முதன்மை நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில் தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடுகின்றனா். புதன்கிழமை போட்டிகள் நிறைவடைகின்றன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments