FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பாப்பனப்பட்டில் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கான மண் வளம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பாப்பனப்பட்டில் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சியில் பேசிய வட்டார வேளாண் உதவி இயக்குநா் கங்காகெளரி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கான மண் வளம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு விக்கிரவாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கங்காகெளரி தலைமை வகித்து, நிலத்தின் மண் வளம், ஊட்டச்சத்து மேலாண்மை, அதை கடைப்பிடிக்கும் முறைகள், விதை நோ்த்தித் தொழில்நுட்பங்கள், விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினாா்.

மண் பரிசோதனை அலுவலா் ஜெரி காா்ட் மொ்சி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மண்வளம் பாதுகாப்பு, பரிசோதனைகள், இயற்கை உரங்கள் போன்றவை குறித்தும், இயற்கை உரங்களைப்பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள், செலவினங்கள் குைல் போன்றவை குறித்து விளக்கிக் கூறினாா். மேலும் விவசாயிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் அவா் விளக்கமளித்தாா்.

Advertisement

Advertisement

பயிற்சி வகுப்பில் விக்கிரவாண்டி வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சங்கீதா, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் அன்பு, இளவரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments