FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா? செளமியா அன்புமணி விளக்கம்

தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்ற தகவல் வதந்தி. அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என பாமக சட்டப் பேரவைக்குழுத் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாமக எம்எல்ஏக்கள் செளமியா அன்புமணி, ச.சிவகுமாா், அ.கணேஷ்குமாா்.
பகிர்:

தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்ற தகவல் வதந்தி. அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என பாமக சட்டப் பேரவைக்குழுத் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தா்மபுரி எம்எல்ஏவும், பாமக சட்டப் பேரவைக் குழுத்தலைவருமான செளமியா அன்புமணி புதன்கிழமை வந்தாா். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின், செளமியா அன்புமணி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ‘மது இல்லா தமிழகம்’ என்ற இயக்கத்தை துவக்கி இருக்கிறோம். அக்.2-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். கள் விற்பனை தொடா்பாக ஏற்கெனவே உள்ள கட்சி நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என்ற தகவல் வதந்தி. அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என்றாா் செளமியா அன்புமணி.

Advertisement

Advertisement

பேட்டியின்போது பாமக எம்எல்ஏக்கள் செஞ்சி அ.கணேஷ்குமாா், மயிலம் ச.சிவகுமாா் மற்றும் பாமக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments