என் மகனுக்கு 7 -ஆம் அதிபதியான குருபகவான் தசை நன்மை தருமா? அடுத்தடுத்த தசைகள் எவ்வாறு இருக்கும்? எனது மகளுக்கு செவ்வாய் மஹாதசை நன்மை தருமா? மருத்துவர் ஆகும் வாய்ப்புண்டா? - வாசகி, தர்மபுரி
உங்கள் மகனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றுள்ள குருபகவானின் தசை நடக்கிறது. இ
உங்கள் மகனுக்கு தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்றுள்ள குருபகவானின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகள் கழித்து அதாவது குருமஹா தசையின் பிற்பகுதி நடக்கத் தொடங்கியவுடன் அவரது வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும். செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருப்பது சிறப்பு. இதனால் ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமும் லாப ஸ்தானமும் சுப பலம் பெறுகின்றன. தொடரும் சனி புத மஹா தசைகள் யோக தசைகளாகவே செல்லும். உங்கள் மகளுக்கு கடக லக்னம், கன்னி ராசி. இன்னும் இரண்டரை ஆண்டுகள் வரையில் செவ்வாய் மஹா தசை நடக்கும். இந்த கால கட்டத்திற்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படிக்க வாய்ப்புண்டாகும். மற்றபடி தொடரும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருக்கும் ராகு மஹா தசையும் குரு, சனிபகவான்களின் தசையும் சிறப்பாகவே செல்லும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.