FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 7

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

பகிர்:

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த முக்கிய விஷயத்திலும் தடுமாற்றம் அடையாத ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வர வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும்.

Advertisement

Advertisement

பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments