FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 9

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

பகிர்:

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

Advertisement

Advertisement

அனுபவப்பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments