முகப்பு
சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?

நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 17 ஜூலை 2022, 5:33 pm IST
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘டான்’ படத்திற்குப் பின் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

அனுதீப் இயக்கத்தில் உருவான அவருடைய அடுத்த படமான ’பிரின்ஸ்’ திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன்னே அஸ்வின்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாவீரன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு மேடையில் சிவ கார்த்திகேயன் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்க வேண்டுமென ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். 

இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு  வெளியாகும் என தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.