FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

நடிகர் மகேஷ் பாபுவைக் கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்

அடிக்கடி சர்ச்சைகளுக்கு நடுவே பயணிக்கும் தென்னிந்திய நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் அவரது சர்ச்சைக்குரிய பதிலால் நெட்டிசன்களால் மீண்டும்   கிண்டல், கேலிக்கு ஆளாகியுள்ளார்.

Updated On : 18 மே 2022, 5:40 pm IST
கோப்புப்படம்
பகிர்:

அடிக்கடி சர்ச்சைகளுக்கு நடுவே பயணிக்கும் தென்னிந்திய நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் அவரது சர்ச்சைக்குரிய பதிலால் நெட்டிசன்களால் மீண்டும்   கிண்டல், கேலிக்கு ஆளாகியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு, மற்றொரு ஹிந்தி நடிகரான டைகர் ஷ்ரஃப் உடன் இணைந்து பான் மசாலா விளம்பரப் படத்தில் நடித்துள்ளது அவரை டிரோல் (troll) செய்பவர்களுக்கு, மற்றொரு முறை டிரோல் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள மேஜர் (Major) படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபுவிடம், எப்போது ஹிந்தி படங்களில் அறிமுகமாக உள்ளீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர், நான் ஹிந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என பதிலளித்தார். அவரது இந்த பதிலுக்கு சினிமாத் துறை பிரபலங்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில், மகேஷ் பாபு பான் மசாலா விளம்பரப்படத்தில் நடித்துள்ளது அவரை பலரும் ட்விட்டரில் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த விளம்பர படத்தில் மகேஷ் பாபு நடித்திருப்பது குறித்து ட்விட்டர் பயனாளர் ஒருவர் பதிவிட்டிருப்பதாவது, “ ஹிந்தி படங்களில் நடித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறிய நடிகர் மகேஷ் பாபு பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது வேடிக்கையாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகர் அகஷய் குமார் பான் மசலா விளம்பரத்தில் நடித்து அது பெரிய அளவில் பேசப்பட்டதால் அவர் அந்த விளம்பரப் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments