‘தவமாய் தவமிருந்து’ பத்மப்ரியாவை மறந்துட்டீங்களா?!
இயக்குனர் சாமியின் ‘மிருகம்’, வசந்தின் ‘சத்தம் போடாதே’, விஷ்ணு வர்த்தனின் ‘பட்டியல்’ ப்ரித்வி ராஜின் ‘உருமி’ பழசி ராஜா உள்ளிட்ட குறிப்பிடத் தக்க சில படங்களில் நடித்து விட்டு சில வருடங்களாக கோலிவுட்
சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ அறிமுக நாயகியான பத்மப்ரியாவை மறந்து விட்டீர்களா? எம்.பி.ஏ பட்டதாரியான நடிகை பத்மப்ரியா, இயக்குனர் சாமியின் ‘மிருகம்’, வசந்தின் ‘சத்தம் போடாதே’, விஷ்ணு வர்த்தனின் ‘பட்டியல்’ ப்ரித்வி ராஜின் ‘உருமி’ பழசி ராஜா உள்ளிட்ட குறிப்பிடத் தக்க சில படங்களில் நடித்து விட்டு சில வருடங்களாக கோலிவுட்டிலிருந்து காணாமலே போய் விட்டார். பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று காற்று வாக்கில் ஒரு செய்திகள் வந்து கொண்டிருந்தன.
தற்போது மலையாளம் தவிர தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம் பத்மப்ரியா. ஜெகபதி பாபுவின் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான ‘படேல் S.I.R' ஆக்ஷன் த்ரில்லரில் பத்மப்ரியா தான் நாயகி. சால்ட் & பெப்பர் லுக்கில் கிண்ணென்று உடற் தசைகள் இழுபட முஷ்டி முறுக்கி வித்யாசமான தோற்றமளிக்கும் ஜெகபதி பாபுவைப் பார்க்கும் போதே இது எத்தகைய ஆக்ஷன் படம் என்று தெரிகிறது. ஆனால் திறமையாக நடிக்கத் தெரிந்த சில நாயகிகளில் ஒருவரான பத்மப்ரியாவுக்கு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் என்ன வேலை இருக்கும் என்று தான் தெரியவில்லை!
Related Article
‘Gulf ’ திரைப்படம் - வளைகுடாத் துயரங்கள் வடிவேலு காமெடி அல்ல!
Advertisement
Advertisement
கடைசிப் படத்தை அறிவித்து நடிப்புக்கு முழுக்கு போடவிருக்கும் பிரபல வாரிசு நடிகர்!
அதிக வருவாய் ஈட்டும் இந்திய நடிகர் யார்? போர்ப்ஸ் தகவல்!
த்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று யோசித்தேன்: விஜய் சேதுபதி
தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தும் இளம் மலையாள நடிகர்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.