முகப்பு
செய்திகள்

மீண்டும் சாவித்ரியாக நடிக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷ்!

எது எப்படியோ என் டி ஆர் வாழ்க்கைச் சித்திரத்தில் யார் மாறினாலும் சரி, கீர்த்தி சுரேஷுக்கு மாத்திரம் மாற்றில்லை எனத் தெரிகிறது.

Updated On : 2 ஜூலை 2018, 1:39 pm IST
பகிர்:

தமிழில் ‘நடிகையர் திலகம்’... தெலுங்கில்  'மகாநடி' திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்து இல்லையில்லை வாழ்ந்து காட்டி பட்டையைக் கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சகல திக்குகளில் இருந்தும் பாராட்டுகள் வந்து குவிந்த வண்ணமிருக்கின்றன. அந்தப் பாராட்டு மழையில் இருந்தே அவர் இன்னும் மீண்டபாடில்லை. அதற்குள்ளாக மீண்டுமொருமுறை சாவித்ரியாக நடிக்கும் வாய்ப்பு அவரது கதவைத் தட்டியுள்ளது.

இம்முறை கீர்த்தி சாவித்ரியாக நடிக்கவிருப்பது நந்தமூரி பால கிருஷ்ணாவின் திரைப்படத்தில். நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பழம்பெரும் நடிகரும், தனது தந்தையும் முன்னாள் ஆந்திரப்பிரதேச முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்க்கையை  திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் என்பது திரை ரசிகர்கள் அனைவரும் அறிந்த செய்தி. அத்திரைப்படத்தை இயக்கவிருப்பது தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி. இவர் ‘மகாநடி’ திரைப்படத்தில் இயக்குனர் நாகி ரெட்டியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தான் இடம்பெற்ற ‘மகாநடி’ யில் கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்தவராக இயக்குனர் கிருஷ்...  என்டிஆர் வாழ்க்கைச் சித்திரத்துக்காக மீண்டுமொருமுறை கீர்த்தியை சாவித்ரியாக்க முடிவெடுத்திருக்கிறார். 

இத்திரைப்படத்தில் சாவித்ரியாக கீர்த்தி நடிக்க, என் டி ஆரின் சக தோழரும், அவரைப் போன்றே அந்நாட்களில் தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாருமான ஏ என் நாகேஸ்வரராவ் வேடத்துக்கு முதலில் நடிகையர் திலகம் திரைப்படத்தில் நாகேஸ்வர ராவ் அலைஸ் ஏ என் ஆர் வேடமேற்று நடித்திருந்த நாக சைதன்யாவையே நடிக்க வைப்பதாக இருந்ததாகவும் தற்போது இயக்குனர் கிருஷ் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு நாகேஸ்வர ராவின் மற்றொரு பேரனும் நடிகருமான சுமந்தை அந்த வேடத்தில் நடிக்கவைக்கவிருப்பதாகவும் தகவல்.

Advertisement

எது எப்படியோ என் டி ஆர் வாழ்க்கைச் சித்திரத்தில் யார் மாறினாலும் சரி, கீர்த்தி சுரேஷுக்கு மாத்திரம் மாற்றில்லை எனத் தெரிகிறது.

ஏனெனில் நடிகைய திலகம் திரைப்படத்தில் கீர்த்தி, சாவித்ரியாக தனது நடிப்புத்திறனை அசைக்க முடியாது நிரூபித்து விட்டாரே அதனால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.