FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழில் கையெழுத்திடுவோம்: விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளும் நடிகர் ஆரி!

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம். நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும்...

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தாய்மொழியில் கையெழுத்திடுவது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார் நடிகர் ஆரி. 

வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சங்கம் இணைந்து  31வது தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கம் தொடங்கப்பட்டது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் நடிகர் ஆரி அறங்காவலராக உள்ள, மாறுவோம் மாற்றுவோம் எனும் அறக்கட்டளையும் இணைந்துள்ளது. இதுதொடர்பாக, தமிழகம் முழுக்கப் பரப்புரை செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசாரப் பேரணியையும் நடத்தவுள்ளார் ஆரி. 

அலுவல் பணிகள் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களிலும், தான் தமிழில் கையெழுத்திடுவதாக ஆரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

Advertisement

Advertisement

என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும்  அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும். 

உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.

நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.

ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை  தோற்கடித்துவிட்டன.

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம். நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம்  தாய் மொழியே என்றார்.

ரெட்டைச் சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments