கிருஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்புக்காட்சி இல்லை!
ரஜினியின் தர்பார் பட சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினியின் தர்பார் பட சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.
இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. படம் வருகிற ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளார். கடந்த முறை நடிகர் விஜயின் பிகில் படம் திரையிட தாமதமானதால் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதன் காரணமாக 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் எந்த நடிகர்களின் படத்திற்கும் அதிகாலையில் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் 6 தியேட்டர்களில் ரஜினியின் தர்பார் பட சிறப்பு ரசிகர் மன்ற காட்சி கிடையாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.