FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

''வரிசையாக நான் நடித்த படங்கள் எல்லாம் தோற்றன'' - சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் உருக்கம்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் போட்டியாளர்களுடன் உருக்கமாக பேசும் விடியோ வைரலாகி வருகிறது. 

Updated On : 29 செப்டம்பர் 2021, 6:16 pm IST
பகிர்:

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் போட்டியாளர்களுடன் உருக்கமாக பேசும் விடியோ வைரலாகி வருகிறது. 

நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வேடர்கள் அணியில் இடம் பெற்றிருந்த ராமுக்கு பூச்சி கடித்து உடலில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விக்ராந்த்திற்கு மண்டையில் அடிப்பட்டதன் காரணமாக மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சையளித்தது. 

மேலும் பார்வதி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாங்களாமே என்று அர்ஜூன் கேட்க, வேடர்கள் அணியினர் பதற்றம் அடைந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் தலைவர் போட்டி ஆரம்பமானது. 

Advertisement

Advertisement

காடர்கள் அணியில் இருந்து உமாபதி மற்றும் ராமும், வேடர்கள் அணியில் இருந்து ஐஸ்வர்யா மற்றும் நந்தாவும் பங்கேற்றார்கள். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா சமாளிக்க முடியாமல் எடையை இறக்கி வைத்தார். இதனையடுத்து வேடர்கள் அணியின் இந்த வார தலைவராக நந்தா வெற்றிபெற்றார். காடர் அணியில் இருந்து உமாபதி வெற்றி பெற்றார். இதன் காரணமாக இந்த வாரம் காடர்கள் அணித் தலைவராக உமாபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில் இந்த வாரம் ப்ரமோ வெளியானது, அப்போது போட்டியாளர்கள் முன்னிலையில் பேசும் அர்ஜூன், தமிழில் எனக்கு ஒரு காலத்தில் நல்ல மார்கெட் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் சற்று தொய்வை சந்தித்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. அப்போது ஒரு படத்தைத் தயாரித்து இயக்கத் துவங்கினேன். இறுதி காட்சியை படமாக்க வேண்டும். என் பெயரில் இருக்கின்ற சொத்துக்களை விற்றேன். என் அம்மா பெங்களூரில் உள்ள வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பினார். என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments