ஐக்கிய அரபு அமீரகத்தின் ’சிறப்புக் கடவுச்சீட்டு’ பெற்ற மம்மூட்டி, மோகன்லால்
பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு கோல்டன் விசா என அழைக்கப்படும் சிறப்பு கடவுச்சீட்டை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது.
இதையும் படிக்க | மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா - சமந்தாவிற்கு சிறந்த நடிகை விருது
Advertisement
Advertisement
இந்த கடவுச்சீட்டின் மூலம் எத்தகைய முன்நிபந்தனையுமின்றி 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும், தங்களது தொழிலை மேற்கொள்ளவும் முடியும்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு சிறப்புக் கடவுச்சீட்டு வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் சிறப்பு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்கு இந்த சிறப்புக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.