முகப்பு
செய்திகள்

பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் மாளவிகா: டிரெண்டாகும் புகைப்படங்கள்

நடிகை மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

Updated On : 31 ஜனவரி 2022, 4:49 pm IST
பகிர்:

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் கவர்ச்சிகரமான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் மாளவிகா நடித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இன்று பிற்பகலில் மாளவிகா மோகனன் வெளியிட்ட அவருடைய மூன்று ஸ்பெஷல் படங்களுக்கு ஒரே மணி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் 2.4 லட்சம் லைக்குகள்!

எப்பவுமே இவரைப் போன்றோருடன் போட்டிபோடும் பிற நடிகைகள் இனி அடுத்த என்ன படங்களை வெளியிடப் போகிறார்களோ?

தற்போது யுத்ரா என்ற ஹிந்திப் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாலதீவுக்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர அவை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments