முகப்பு
செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சிபி சத்யராஜின் 'வட்டம்'

கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள வட்டம் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

Updated On : 19 ஜூலை 2022, 11:27 am IST
பகிர்:

கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள வட்டம் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மதுபானக்கடை படத்தின் மூலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் இயக்குநர் கமலகண்ணன். இவர் அடுத்ததாக வட்டம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். 

Advertisement

Advertisement

இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த O2 திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.