ரஜினியைத் தொடர்ந்து விஜய் வீட்டிலும் பறக்கும் தேசியக் கொடி!
நடிகர் விஜய் வீட்டில் ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் வீட்டில் ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 13) முதல் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனயைடுத்து மக்கள் தேசியக் கொடியைத் தங்கள் வீடுகளில் ஏற்றிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி, நாம் இந்தியனென்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் மோகன்லாலும் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.